ஹெச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை! போலீசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!!

சென்னை: பாஜக தேசிய தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை அவசியமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பதில் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆண்டாள் விவகாரம், பெரியார் தொடர்பாக ஹெச்.ராஜா தெரிவிக்கும் கருத்துக்கள் வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டது.
திருவேற்காட்டை சேர்ந்த வக்கீல் தமிழ்வேந்தன், இதுதொடர்பாக ஹெச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை அவசியம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த மார்ச்7ல் அம்பத்தூர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார்.
அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே உயர்நீதிமன்றத்தை நாடினார். இன்று உயர்நீதிமன்றத்தில் அவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதி ரமேஷ், இதுகுறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
வழக்கை மார்ச்28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here