பேஸ்புக் தந்த பிரச்சார ஐடியா! சுவாரஸ்ய தகவல்!!

மும்பை: இந்திய தேர்தல்களில் பேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன என்ற விபரங்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், தேர்தல் பிரச்சார யுக்திகளை வகுக்க பேஸ்புக் உதவியது தெரியவந்துள்ளது.
2014 மக்களவை தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துவந்தது.
பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்திருந்தார் மணிசங்கர் ஐயர்.பிரதமர் டீக்கடைக்காரர். அவருக்கு அரசியல், நிர்வாகம் தெரியாது என்ற மணிசங்கரின் விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பேஸ்புக்கில் டிரண்டாக பரவியது.
இதனைத்தொடர்ந்து ’டீ சாப்பிட்டுக்கொண்டே பேசுவோம்’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

டீக்கடையில் அமர்ந்துகொண்டு டீ சாப்பிட்டுக்கொண்டே இளைஞர்கள் பிரச்சனை தொடர்பாக மோடி விடியோ கான்பரன்சிங்கில் பேசினார்.
இந்நிகழ்ச்சியை வடிவமைக்க பேஸ்புக் தகவல்தான் காரணம் என்று கூறப்படுகிறது.இதேபோன்று 2015ல் நடைபெற்ற பிகார் தேர்தலில் ஒரு சம்பவம்.
பிகார்முதல்வர் நிதிஷ்குமார் மந்திரவாதி ஒருவரை சந்தித்ததாக படம் ஒன்று வெளியானது.
இது நிதிஷ்குமார் இமேஜை பாதிக்கும் வகையில் இருந்தது.இணைய தகவல்களால் இதுகுறித்து தெரியவந்ததும் உடனடியாக மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி படம் ஒன்று வெளியிடப்பட்டு எதிர்ப்பலை அடக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் ஸ்மிருதி இரானி ஜோதிடரிடம் கைரேகை பார்த்துள்ளார்.

இரானியின் கையைப்பார்த்த ஜோதிடர், குடியரசுத்தலைவராக உள்ள யோகம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதுபோன்று தேர்தல் களத்தில் பிரச்சார யூகங்கள் வகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது பேஸ்புக் தகவல்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here