மாநிலங்களவை தேர்தலில் கோடீஸ்வரர்கள் போட்டி!

டெல்லி:மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 87சதவீதம்பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
தேர்தல் சீர்திருத்தக்கண்காணிப்பு குழு என்ற அமைப்பு இதுதொடர்பாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்ச் 23ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் 16மாநிலங்களில் இருந்து 58பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 87சதவீதம்பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மகேந்திரபிரசாத்தின் சொத்துமதிப்பு ரூ.4,078 கோடி,

சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நடிகை ஜெயாபச்சன் ரூ.1,001 கோடி சொத்துவைத்துள்ளார்.
மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் பி.எம்.பரூக் ரூ.766 கோடி சொத்துவைத்துள்ளார்.
25 சதவீத வேட்பாளர்களின் மீது குற்ற வழக்குகள் உள்ளன.8 வேட்பாளர்களின் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
7 வேட்பாளர்கள் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படித்தவர்களாக உள்ளனர்.
மற்றவர்கள் பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here