அம்பேத்கருக்கு அவமதிப்பு! கிரிக்கெட் வீரர் மீது வழக்கு!!

ஜோத்பூர்:கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கர் மீது விமர்சனக்கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் பாண்டியா.
கடந்த டிசம்பர் மாதம் இச்சம்பவம் நடந்தது.
அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும், குறிப்பிட்ட இனத்தவர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் ஹர்திக்பாண்டியா கருத்து தெரிவித்திருந்ததாக புகார் எழுந்தது.இதுதொடர்பாக பாண்டியா மீது வழக்குப்பதிவு செய்ய டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தார்.இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாண்டியா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பிருந்தால் தயங்க கூடாது என்று போலீசாருக்கு அறிவுறுத்தியது.
அதனை ஏற்று பாண்டியா மீது ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here