Connect with us

National

ஓடிஒளியும் மத்திய அரசு!

Published

on

ஹைதராபாத்:மத்திய அரசு ஆந்திராவின் கோரிக்கையை ஏற்க தயங்கி ஓடி ஒளிகிறது என்று குற்றம்சாட்டினார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேச கட்சியினர் மாநிலங்கள் அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சந்திரபாபுநாயுடு வீடியோ கான்பரன்சிங்கில் உரையாற்றினார்.ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம், அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். ஆனாலும் மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யமாக உள்ளது.

லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசு தொடர்ந்து ஒளிந்து ஓடுவது ஏன்?
இது அரசியல் தற்கொலைக்கு சமம் என அவர் கூறினார்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator