மகளை பலாத்காரம் செய்தவரை சரமாரியாக தாக்கிய தாய்!

இந்தூர்: மகளை பலாத்காரம் செய்த வாலிபரை பளார்…பளார்… என்று அறைந்து  கோபத்தை தணித்துக்கொண்டார் ஒரு பெண்.   மத்தியப்பிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

கடந்தவாரம் வணிகவளாகத்தில் சிறுமியை சீண்டியதாக மாணவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஒரு பெண் உட்பட 3பேரை போலீசார் கைது செய்தனர். அப்பெண் தாயுடன் கோபித்துக்கொண்டு  குடும்ப நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பலாத்கார வழக்கில் கைதானவர்களை இந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தயாராகினர்.  கைதான ஒருவர் தனியாக வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அவரை அணுகினார்.

எனது மகளின் வாழ்க்கை சீரழித்தது நீதானே என்று கேட்டவாறே ஆத்திரத்துடன் அந்த வாலிபரை படபடவென்று அடித்தார். அந்த வாலிபரை போலீசார் மீட்டு அழைத்து சென்றனர்.                                                                                                                    இதனை அங்கிருந்தவர்கள் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here