டிஜிபி அலுவலகத்தில் போலீசார் தீக்குளிக்க முயற்சி!

சென்னை: டிஜிபி அலுவலகம் முன்பு காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் தீக்குளிக்க முயற்சி செய்தார்கள். அவர்களை அருகில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.ஜாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாக தேனி மாவட்ட எஸ்பி மற்றும் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மீது இருவரும் குற்றம்சாட்டினர்.
தங்களை ராமநாதபுரத்துக்கு மாற்றியதற்கு ஜாதி துவேஷம் தான் காரணம் எனவும் குறிப்பிட்டனர்.
தற்கொலைக்கு முயன்ற காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்து உள்ள தேனி மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், காவலர்கள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.
கம்பம் ரேக்ளா பந்தயத்தில் மக்கள் முகம் சுழிக்கும் வகையில் 2 காவலர்கள் செயல்பட்டனர்.
காவல்துறை அதிகாரிகளை மிரட்டும்வகையில் சுவரொட்டிகள் ஒட்டுகிறார்கள்.
ஒழுக்கமின்மையால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தீக்குளிக்க முயன்றது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here