பாஜகவுடன் கட்…கட்….

சென்னை: பாஜகவுடன் கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் தமிழக அரசு காவிரி விவகாரத்தில் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி திமுக எம்ஏல்ஏ பிச்சாண்டி பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,
இதற்கு முன்பு பாஜக வுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது காவிரி பிரச்சனை தீர்க்க என்ன செய்தது?
பாஜகவுடன் அதிமுக கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம் அதிமுக எம்.பி.க்கள் நடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

காவிரிக்காக மற்ற மாநிலங்கள் குரல் கொடுக்கவில்லை.
ஆந்திர அரசு ஆந்திர பிரசச்னைக்காக பாஜக மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here