இரவு ஓட்டல்களுக்கு தடை ஏன்?

சென்னை: தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் உணவகங்களை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தும் காவல் துறை உத்தரவு இட்டுள்ளது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கணேஷ் பிரபு என்பவர் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள உணவு விடுதிக்கு சாப்பிட இரவு 10 மணிக்குச் சென்றுள்ளார். அப்போது காவல் துறையினர் இரவு 10 மணிக்குமேல் உணவு விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளதை ஓட்டலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

இரவில் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அவர் விளக்கம் கேட்டார்.
அதில், 365 நாட்களும் உணவு விடுதிகள் திறந்திருக்கலாம்.
விடுதிகளின் நேரத்தை காவல் துறை தீர்மானிக்க அதிகாரம் இல்லை என பதில் கிடைத்தது.
எனவே காவல்துறையின் இந்த கட்டுப்பாட்டால் இரவு பயணிகள், ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள்.

உணவு விடுதிகளை இரவு 10 மணிக்கு மூடச்சொல்லி உத்தரவிடும் காவல்துறைக்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் கணேஷ்பிரபு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல்குத்துஸ் அடங்கிய அமர்வு இம்மனுவுக்கு வரும் வெள்ளிக்கிழமைக்குள் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here