Connect with us

Cinema

தயாரிப்பாளர் மனைவி எந்த நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார்?

Published

on

சென்னை: தமிழகத்தின் முன்னணி சினிமா தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவின் மனைவி நேகா டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தயாரிப்பாளர் சங்க செயலாளராக இருந்தவர் ஞானவேல்ராஜா. சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவரது மனைவி நேகா. இருவருக்கும் 2011ல் திருமணம் நடந்தது.
நேகா சினிமா நட்சத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்பாளர்.
அவர் டுவிட்டரில்,
சில நடிகைகள் குடும்பத்தை உடைப்பவர்கள்.அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள்.
பொதுவாகச் சொல்லவில்லை, அது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும்.
சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள்.
படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
அவர்களைப் பற்றிய பட்டியலை விரைவில் வெளியிடுவேன். சினிமாவில் இருந்து அவர்களை வெளியேற்றுவேன், என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார்.

அது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. உடனே அப்பதிவை நீக்கிவிட்டார்.
தற்போது அதற்கு விளக்கம் அளித்து புதுப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எனது பதிவு எனது பிரச்சனை அல்ல.
சென்சிடிவான விஷயங்களை பொழுதுபோக்க எழுதவில்லை.
ஆனால், இதனை ‘லீக்’ என்று விமர்சிக்கின்றனர்.

என்னைச்சுற்றியுள்ள சிலருக்கு நடக்கும் விஷயங்களை, சில மோசமானவர்களை அடையாளம் சொன்னேன்.
பதிவை நீக்கிவிட்டாலும் ஷோ காட்டும் பெண்களுக்கு இது ஒரு படிப்பினையாக அமையவேண்டும். இவ்வாறு நேகா தெரிவித்துள்ளார்.நேகா கொதித்தெழ காரணம் அவரது கணவர் குடும்பத்துக்கு நெருக்கமான 2வது தலைமுறை நடிகர் வீட்டில் நடந்த சம்பவம்தான் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

 

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator