நடிகைக்கு அம்மா கொடுத்த ஷாக்!

பெங்களூர்: கர்நாடகா காங்கிரசில் வளர்ந்துவரும் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா.

தற்போது கட்சியின் சமூகஊடகப்பொறுப்பை அவர்தான் நிர்வகித்து வருகிறார்.  கர்நாடகாவில் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்நேரத்தில் எப்போதும்  வேலையில் கவனமாக உள்ளார். 

அவர் தாய் ரஞ்சிதா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ளார். திவ்யாவின் தாய் அளித்த பேட்டி விபரம்:

திவ்யாவுக்கு திருமணம் செய்துபார்க்க ஆசைப்படுகிறேன்.அவள் வீட்டில் இருக்கும்போதெல்லாம் வற்புறுத்துவேன்.

அவளுக்கும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைஉள்ளது.

ஆனால், தனது அரசியல் பயணத்தை முக்கியமாக எடுத்துக்கொள்கிறாள். அரசியலில் மிகப்பெரிய பதவிக்கு வந்தபின்னர் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாகவே உறுப்பினராக உள்ளேன்.  பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்புக்கேட்டிருந்தேன். கிடைக்கவில்லை.   எனது உழைப்பை கட்சி உதாசீனம் செய்வதை ஏற்கமுடியவில்லை.  எனவே, இம்முறை சீட் கிடைக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன் என்றார் ரஞ்சிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here