ஏர் கம்ப்ரசர் உடலில் திணிப்பு! தொழிலாளி கொடூர கொலை!

டெல்லி: மரம் அறுக்கும் தொழிலாளி ஏர் கம்ப்ரசர் உதவியால் கொடூரமாக கொல்லப்பட்டார்.டெல்லியை அடுத்த கிராமத்தில் ப்ளைவுட் தொழிற்சாலை உள்ளது. அங்கு மரம் அறுக்கும் பிரிவில் ரவீந்திரா பணியாற்றி வந்தார்.                                            அவரிடம் வேலைகேட்டு அஞ்சன் மிஸ்ரா என்ற வாலிபர் பலமுறை கோரிக்கை விடுத்தார்.ரவீந்திரா தான் வேலைபார்க்கும் நிறுவனத்தில் மிஸ்ராவுக்கு வேலைவாங்கி தந்தார்.  ரவீந்திராவை விடவும் படித்தவர் என்பதால் மிஸ்ராவுக்கு கூடுதல் சம்பளம் கிடைத்தது.     இதனால் நாளடைவில் ரவீந்திராவை கேலி பேச தொடங்கினார் மிஸ்ரா.

சம்பவத்தன்று கந்தலான பழைய உடைகளை அணிந்துவந்துள்ளார் ரவீந்திரா. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு எழுந்தது. ஆத்திரமடைந்த மிஸ்ரா, அங்கிருந்த ஏர்கன்னை எடுத்து ரவீந்திராவை தாக்கினார்.ரவீந்திராவின் கிழிந்த ஆடையின் வழியாக அவரது ஆசனவாய் பகுதியில் ஏர்கன்னை சொருகினார். கம்ப்ரசரை ஆன் செய்தார்.   இதனால் உள்ளுறுப்புகள் வெடித்து ரத்தம் கசிந்தன. சம்பவ இடத்திலேயே ரவீந்திரா இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here