தோனியின் காலை தொட்ட ரசிகருக்கு எச்சரிக்கை!

லக்னோ: கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவரது காலைத்தொட்டு வணங்கினார் ஒரு ரசிகர்.

போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த ரசிகரை எச்சரித்து விடுவித்தனர்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் நடைபெற்ற போட்டியின் பரிசளிப்பு விழா லக்னோவில் நடைபெற்றது.                                                                              வெற்றிபெற்ற இளைஞர் ஒருவருக்கு செல்போன் பரிசாக வழங்கப்பட்டது.                    பரிசுக்கு தேர்வான அந்நபர் அறிவிக்கப்பட்டதுமே மகிழ்ச்சிபொங்க மேடையேறினார். தோனியின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார். டோனியின் காலைத்தொட்டு வணங்கினார்.  தோனி அவரை எழுப்பினார். ரசிகர் அவரை நெஞ்சார தழுவி அன்பு முத்தம் தந்தார். செல்பி படமும் எடுத்துக்கொண்டார். இதனால் விழா அரங்கில் கைதட்டல் வெகுநேரம்  ஒலித்தது.                                                                                                    தோனியின் காலை ரசிகர்கள் தொட்டு வழங்கும் சம்பவம் பலமுறை மைதானத்தில் நடந்துள்ளது. 

இருந்தபோதும் தற்போது ஏ பிளஸ் பாதுகாப்பு தோனிக்கு அளிக்கப்பட்டுள்ளது அதனால் தோனியை வணங்கிய வாலிபரை போலீசார் விழா முடிந்தபின் கண்டித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here