சென்னை நகைக்கடை அதிபர் ரூ.834கோடி மோசடி!

சென்னை:தென்னிந்தியாவில் பிரபலமான கனிஷ்க் தங்க நகைக்கடை 14வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கனிஷ்க் நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் முறைகேடு இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விசாரிக்குமாறு சிபிஐக்கு ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.
இதுகுறித்து தெரியவந்த பூபேஷ்குமார் உஷாரானார்.

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய வட்டியையும் கட்டாமல் நிறுத்திவிட்டார்.
சென்னை ராஜாஜி நகரில் உள்ள ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கிளையில் மட்டும் ரூ.173கோடி கடன்பெற்றுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கார்பரேஷன் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட 14 வங்கிகளில் இவர் கடன்பெற்றுள்ள விபரம் தெரியவந்துள்ளது.
தற்போது பூபேஷ்குமார் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here