11மாத குழந்தையின் 3வது கால் அகற்றம்!

ஷாங்காய்: சீனாவை சேர்ந்த 11மாத ஆண்குழந்தையின் மூன்றாவது கால் அகற்றப்பட்டது.
ஷாங்காய் நகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளிக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை வயிற்றில் வளரும்போதே தாய்க்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.
இதனால் அப்பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் வளரும் குழந்தைக்கு 3கால்கள் இருப்பது தெரியவந்தது.
சிசேரியன் செய்து அப்பெண் குழந்தை பெற்றார்.

மா யங்க்பி என பெயரிடப்பட்ட அக்குழந்தை வழக்கமான இரு கால்களுடனும், அவற்றின் நடுவே மூன்றாவது காலும் கொண்டு பிறந்திருந்தது.ஷாங்காய் சுகாதார ஆராய்ச்சி சிகிச்சை மையத்தில் அக்குழந்தைக்கு ஆபரேசன் செய்து நடுவில் வளர்ந்த காலை டாக்டர்கள் அகற்றியுள்ளனர்.
வலதுகாலை ஆபரேசன் செய்து சரியாக பொருத்தவேண்டுமென்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here