தம்பதியாக வேடமிட்டு கைவரிசை! சென்னையில் வாலிபர்கள் கைது!!

சென்னை:தம்பதியாக வேடமிட்டு திருடிவந்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் பல இடங்களில் இளம் வயதுள்ள தம்பதியினர் திருடிவந்ததாக போலீசார் விசாரணை நடத்திவந்தனர்.
இன்று பிடிபட்ட அத்தம்பதியினர் இருவருமே இளைஞர்கள் என்றும், கணவனாக நடித்தவர் இன்ஜினியரிங் படித்தவர் என்றும் தெரியவந்தது.சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் வழக்கம்போல் திருட சென்றனர்.
வீடு வாடகைக்கு கேட்பதற்காக கணவன் – மனைவியை போல் உரிமையாளர் வீட்டுக்குள் புகுந்தனர்.
அங்கிருந்தவர்கள் முகத்தில் மயக்கப்பொடிதூவி திருட முயன்றனர்.
மயக்கத்தில் இருந்து விடுபட்ட உரிமையாளர் திருடன்…திருடன் என்று கத்தினார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன் திருடர்கள் பிடிபட்டனர்.

ஆண்வேடத்தில் வந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்றும் அவர் இன் ஜினியரிங் படித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
பெண்வேடமிட்டவர் சுஜாந்த் என்றும் பழனியை சேர்ந்த இவர் பல ஆண்டுகளாக சென்னையில் வசித்துவருகிறார். கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
இவ்விருவரும் ஜோடியாக வேடமிட்டு நகரின் பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here