இலங்கை தமிழர்கள் படுகொலையானபோது எங்கே சென்றார் ராகுல்?!

சென்னை: இலங்கையில் அழகுத் தமிழ் பேசும் தமிழர்கள் கொல்லப்பட்டநேரத்தில் ராகுல் எங்கே போனார் என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற 84வது காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் தமிழகத்தில் பாஜக அரசு தமிழை அழிக்க நினைக்கிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காந்தி பெயரை வைத்து கொண்டு ராகுல் குடும்பத்தினர் ஏமாற்றி வருகின்றனர்.
இவர்களா நாட்டை முன்னேற்ற போகின்றனர் ?
அழகு தமிழை அழிக்க பார்க்கிறது பாஜக என்று ராகுல் குற்றம் சாட்டுகிறார். உங்கள் ஆட்சியில் தான் இலங்கையில் அழகு தமிழை பேசும் மக்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டனர் அப்போது எங்கே போச்சு இந்த அழகுத்தமிழ் பாசம்.
காங்கிரஸ் தற்போது தமிழை வைத்து தமிழகத்தில் பிழைப்பு நடத்த பார்க்கிறது.

தமிழகத்தை புறக்கணிக்கப்படுவதாக ராகுல் மாயையை ஏற்படுத்துகிறார்.நான்கு மாநிலங்களில் மட்டும் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் நாட்டின் குரல் அல்ல அது ஒரு குடும்பத்தின் குரல் என்று கடுமையாக பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here