Connect with us

india

பாஸ்மார்க் போடுங்க! ஆசிரியர்களுக்கு நூதன லஞ்சம்!!

Published

on

உத்தரப்பிரதேசம்:பிளஸ்2 மாணவர்கள் பாஸ்மார்க் போடுவதற்கு விடைத்தாளில் ரூ.500 இணைத்து வைத்துள்ளனர்.அம்மாநிலத்தில் சமீபத்தில் 12-ம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்துள்ளது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
பெரோசாபாத் மாவட்டம் ஆக்ராவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலையில் கேள்வித்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது, மாணவர்கள் தங்களின் விடைத்தாளில் ரூ.100, ரூ.50, ரூ.500 நோட்டுகளை இணைத்து தங்களை தேர்வில் பாஸ் செய்யக் கோரியுள்ளனர்.தேர்வு எழுதும் அறைகளில் கண்காணிப்பு கேமிராக்கள் இருந்தபோதிலும், மாணவர்கள் இதுபோன்று செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ”தேர்வுகளை சரியாக எழுதாத மாணவர்கள், இதுபோன்று விடைத்தாளில் பணத்தை இணைத்து அனுப்புகிறார்கள். தங்களின் பணத்தை எடுத்துக்கொண்டு எப்படியாவது பாஸ்செய்யக் கோருகின்றனர்.ஆனால், ஆசிரியர்களைப் பொறுத்தவரை விடைகளுக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கிறோம், பணத்துக்காக அல்ல” என்றார்

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator