ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை!

காஞ்சிபுரம்: ரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு கிடையாது என்று கடுமையாக சாடினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் உச்சக்கட்ட ஊழல் ஆட்சி நடைபெற்று வருகின்றது.
ஊழல்கள் குறித்து கவர்னரிடம் பா.ம.க. 2 முறை மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுதந்திர தினத்துக்கும், குடியரசு தினத்துக்கும் வித்தியாசம் தெரியாதவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். விஜயகாந்த் அரசியலில் இருந்து காணாமல் போய்விட்டார்.
தினகரன் ஹவாலா பணத்தில் ஊர்சுற்றுகிறார்.

ரஜினி, கமல் போன்றவர்கள் துளியும் அரசியல் அறிவு இல்லாமல் மக்கள் சேவையாற்ற போவதாக கூறுகின்றனர்.
இவர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
காவிரி விவகாரத்தில் ராஜினாமா என்பது தேவை இல்லை. அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என்றார்.இதேபோன்று அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கமல், ரஜினியை சாடினார்.
அரசியல் என்றால் என்ன, மக்கள் சேவை என்றால் என்ன என்று தெரியாதவர்கள் நடிகர்கள்.

அவர்கள் ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்து முதல்வர் கனவுடன் வலம் வருகிறார்கள்.
சினிமாத்துறையில் வரவேற்பு குறைந்ததால், மார்க்கெட் இல்லாததால் அவர்கள் அரசியலுக்கு வருகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here