Connect with us

International

விமானத்தில் சென்றவருக்கு மாரடைப்பு! சக பயணிகள் உயிர்பிழைக்க வைத்தனர்!

Published

on

அமெரிக்கா: விமானத்தில் கடைசி மூச்சை விடவிருந்த பயணியை சக பயணிகள் காப்பாற்றி உள்ளனர்.
இந்த அதிசய சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில்.

டெட்ராய்ட் நகரில் இருந்து ஓர்லண்டோ நகருக்கு செல்ல ஸ்பிரிட் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தயார் நிலையில் இருந்தது.
அதில் இருந்த பயணிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை யதேச்சையாக உடன் பயணித்த நர்ஸ் ஒருவர் பார்த்தார்.நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தார்.
விமானத்தில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அவருக்கு பொருத்தப்பட்டது.
விமான பயணிகள் அனைவரும் ஒருங்கிணந்து அப்பயணியை காப்பாற்றுவதற்கு உதவினர்.

சுமார் அரை மணி நேரத்துக்குப்பின் அந்நபர் கண்விழித்து அனைவரையும் பார்த்தார்.
இதனால் பயணிகள் அனைவரும் ஓ வென்று உற்சாக கூச்சலிட்டனர். ஒருவரை  ஒருவர் கட்டித்தழுவிக்கொண்டனர்.

டெட்ராய்ட் நகரில் தனியார் மருத்துவமனையில் அந்நபர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் பயணத்தை தொடர்ந்தனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator