ஆதார் விபரங்கள் கசியாமல் மக்கள்தான் பாதுகாக்க வேண்டுமாம்!

டெல்லி: ஆதார் தகவல்களை கசியவிடாமல் பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆதார் தகவல்களை இணையத்தில் பகிரும்போது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெறுவதற்கு முக்கியமாக ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணையதளங்களில் பலரது ஆதார் தகவல்கள் எளிதாக கிடைப்பதாக செய்திகள் வெளிவந்தன.


இதைதொடர்ந்து பொதுமக்களுக்கு ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எந்த ஒரு சேவையை பெறுவதற்கு இணையதளத்தில் ஆதார் எண் போன்ற தகவல்களை தெரிவிக்கும்போது முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
இணையதளத்தில் ஆதார் எண்னை வெளியிடுவதற்கு அல்லது பதிவிடுவதற்கு ஆதார் ஆணையம் பொறுப்பாகாது.

ஒருவரை ஆதார் எண்ணை வைத்துக்கொண்டு மட்டும் ஏமாற்றிவிட முடியாது.
அவருடைய அடையாளத்தை அங்கீகரிப்பதற்கு ‘பயோமெட்ரிக்’ அங்கீகாரம் தேவைப்படுகிறது. மக்களின் ஆதார் குறித்த அனைத்து தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here