ஈராக்கில் 39 இந்தியர் கொல்லப்பட்டது எப்போது? மத்திய அரசு மீது கடும் கண்டனம்!

டெல்லி: ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியிருந்த 39 இந்தியர்கள் இறந்துவிட்டனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக் புனரமைப்பு பணியில் இந்தியர்கள் குழு ஈடுபட்டிருந்தது.ஆப்கன் எல்லைப்பகுதியில் உள்ள ஈராக்கில் கட்டிடப்பணிகள், சாலை மேம்பாட்டு பணியில் இந்தியக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
2014ல் அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதனை மத்திய அரசு மறுத்தது. அனைவரும் உயிருடன் உள்ளனர் என்று அடித்துக்கூறியது.
இந்நிலையில், இந்தியாவை சேர்ந்த அனைவரும் இறந்துவிட்டதாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மக்களவையில் அவர் இதனை தெரிவிக்கையில் கடும் கண்டனத்துக்குள்ளானார்.
இந்தியர்கள் இறந்தது எப்போது என்ற விபரத்தை தெரிவிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

இந்த விபரத்தை முதலில் எங்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று உறவினர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர் என்பதை பலமாதங்களாக தெரிவித்துவருகின்றேன். ஆனால், என்வாய்க்கு பூட்டுபோட்டுவிட்டு இப்போது தெரிவிக்கின்றனர். என்று ஈராக்கில் இருந்து திரும்பிய ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமான தகவல் தற்போதுதான் வந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளனர். மாநில அரசுகளுக்கு இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
இறந்தவர்களில், 27 பேர் பஞ்சாப், 6 பேர் பீகார், நால்வர் இமாச்சல பிரதேசம், இருவர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here