விஹெச்பி யாத்திரைக்கு எதிர்ப்பு! தமிழகத்தில் 144தடையுத்தரவு!!

சென்னை: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், யாத்திரை நுழையும் நெல்லை மாவட்ட எல்லைப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, உலக இந்து தினம் கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஹெச்பி அமைப்பு நாடு முழுவதும் யாத்திரை நடத்தி வருகிறது.
கேரளாவில் நடந்துவரும் இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் சென்று ராமேஸ்வரத்தில் முடிவடைகிறது.

இந்த யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதுகுறித்து பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் சார்பிலும் இந்த யாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், யாத்திரையை தமிழகத்துக்குள் உள்ளே நுழையவிடாமல் தடுக்க தமிழக வாழ்வுரிமை இயக்கத்தினர் நெல்லைக்கு புறப்பட்டனர். வழியில் அதன் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் முழுவதும் 23ம் தேதிவரை 144தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here