அமீரகத்தில் வேலை தேடுவோருக்கு இனிப்பான செய்தி!

அமீரகம்: அமீரகத்தில் வேலை தேடும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி கிடைத்துள்ளது.
அமீரகத்தில் வீட்டுவேலை, உதவியாளர், டிரைவர், கட்டிட பணிகளில் உதவும் சித்தாள் போன்ற பணிகளுக்கு அதிகளவில் இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தியாவின் வெளியுறவுத்துறை இந்திய தொழிலாளர்களுக்கு அமீரகத்தில் உரிய சம்பளம், உதவி, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அமீரக தொழிலாளர் நலத்துறையுடன் சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்றையும் இந்தியா செய்துள்ளது.
அதன்படி, அமீரகத்தில் வேலைதேடும் இந்திய தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு மையங்கள் கூடுதலாக திறக்கப்பட உள்ளன. அமீரகம் மற்றும் இந்தியாவின் பல நகரங்களில் இம்மையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதனால் மிகவும் எளிதாகவும், எவ்வித முறைகேடுகள் இன்றியும் அமீரகத்தில் வேலைவாய்ப்பு பெறமுடியும். நேரம், பணம், மிச்சமாகும்.
வெளிநாட்டு தொழிலாளர் நலனுக்காக அமீரகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. 2015ல் தொழிலாளர்கள் குடியமர்வுக்கான சட்டதிட்டங்கள் எளிமையாக்கப்பட்டன.
2017ல் தொழிலாளர்களுக்கான, சம்பளம் சலுகைகளை உறுதிப்படுத்தும் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
தொழிலாளர்களை கொடுமை செய்வோர் கடுமையாக தண்டிக்கவும் சட்டம் இயற்றியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here