க்ரிப்டோ கரன்சியை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ்!

மும்பை: இந்தியாவில் முதன்முறையாக பிட்காயினை போன்று என்’கேஷ் டோக்கன்கள் அறிமுகமாகி உள்ளன.

க்ரிப்டோ கரன்சிகளை மத்திய அரசு ஆதரிக்கவில்லை என்றாலும் அவை அமைக்கப்பட்ட ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அரசு ஆதரிக்கிறது.
இத்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, பணப்பரிமாற்றம், பொருட்கள் கொள்முதல், விற்பனை ஆகியவை செய்யப்பட்டால் மோசடி நடைபெறாமல் தவிர்க்கலாம். மோசடி நடந்தாலும் யார் ,எங்கு செய்துள்ளனர் என்பதை உடனடியாக கண்டுபிடிக்கலாம்.

டிஜிட்டல் கரன்சி விற்பனைக்கு முன்னோட்டமாக டோக்கன் விற்பனை நடைபெறும்.
இந்தியாவில் உள்ள டிஜிட்டல் கரன்சி எக்சேஞ்சான காயினெக்சில் என்’கேஷ் டோக்கன்கள் விற்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனமும், டிம் டிராப்பரும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

என்’கேஷ் டோக்கன்களை பயன்படுத்தி பல்வேறு முன்னணி பிராண்டுகளின் பொருட்களை வாங்க முடியும். இதனால் சில்லறை விற்பனைத்துறையில் வாடிக்கையாளர்கள் குறித்து பிரத்யேக அனுபவங்களை பெறமுடியும் என்று காயினெக்ஸ் நிர்வாகி ஆதித்யநாயக் தெரிவித்தார்.தற்போது ரேமண்ட்ஸ், அல்லன்ஷோலே, ஜின்னிஜோனி உள்ளிட்ட முன்னணி பிராண்டுகள் என்’கேஷ் டோக்கன்களை ஏற்கவுள்ளன. இந்த நெட்வொர்க் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும். இவ்வாறு ஆதித்யநாயக் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here