கர்நாடகாவில் தனி மதம்! அமைச்சரவை ஒப்புதல்!!

பெங்களூர்:வீரசைவம், லிங்காயத்து மதங்களை ஒருங்கிணைத்து அதற்கு தனிமதம் என்ற அங்கீகாரம் வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சிவபெருமானை வழிபடும் சைவ மதத்தின் ஒரு பிரிவு வீரசைவம் ஆகும்.
அந்த சமூகத்தில் பிறந்த பசவண்ணர் லிங்காயத்து என்ற புரட்சிகரமான ஆன்மிக நெறிமுறையை வகுத்துக்கொடுத்தார்.
அதனை பின்பற்றுவோர் லிங்காயத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையாக இச்சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சமூகத்தினரின் வாக்குகளை கவர அச்சமூகத்தினருக்கு அரசு உதவி,வேலைவாய்ப்பில் சலுகைகள் காட்ட அரசியல் கட்சிகள் முடிவெடுத்தன.
அதற்கு முதற்கட்டமாக வீரசைவ, லிங்காயத்து சமூகங்களை ஒருங்கிணைத்து வீரசைவ லிங்காயத்துகள் என்ற தனி மதத்தை ஏற்படுத்தி அதனை அங்கீகரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, தங்கள் சமூகத்துக்கு தனிமத அந்தஸ்து வேண்டும் என்று லிங்காயத்து மடாதிபதிகளும் வலியுறுத்தினர்.

இதுக்குறித்து முன்னாள் நீதிபதி நாகமோகந்தாஸ் குழு அமைத்து ஆய்வுநடத்தியது அரசு.
அக்குழு தனிமத அந்தஸ்துக்கு பச்சைக்கொடி காட்டி பரிந்துரைத்தது.
கர்நாடக அமைச்சரவை இன்று கூடி தனிமத அந்தஸ்து குறித்து ஒப்புதல் அளித்தது.
ஆனால், அமைச்சரவையில் இருந்து கர்நாடகாவின் வடபகுதியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் பாதியில் வெளியேறினார். இது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கல்புர்கி நகரில் வீரசைவர்கள், லிங்காயத்து சமூகத்தினருக்கு இடையே இந்த அறிவிப்பால்மோதல் எழுந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் பேரவை தேர்தல் விரைவில் வருகிறது. பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அடையாளம் காணப்பட்டுள்ள எடியூரப்பா,லிங்காயத்து சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here