த்ரில் வெற்றி! பாராட்டு வெள்ளத்தில் தினேஷ் கார்த்திக்!!

சென்னை: நிதாஹாஸ் சுழற்கோப்பையை தட்டித்தந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.கொழும்பு பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் நிதாஹாஸ் டிராபி முத்தரப்பு டி20போட்டிகள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேசம் 8 விக்கெட் இழந்து 166 ரன் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய இந்தியா 20வது ஓவரில் 12ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பரபரப்பான நிலையை எட்டியது.
கடைசி ஓவரில் தினேஷ்கார்த்திக், விஜய்சங்கர் என்ற தமிழர்கள் களத்தில் இருந்தனர்.
விஜய்சங்கர் 4வது பந்தில் பவுண்டரி அடித்தார். 5வதுபந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

உலகெங்கும் இருக்கை நுனிக்கு வந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க கடைசி பந்தில் 5ரன் எடுக்கவேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு.

தனக்கான கடைசிவாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட தினேஷ்கார்த்திக் பவுண்ட்ரி அடித்து இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித்தந்தார்.

8 பந்துகளில் 29 ரன்களைக் குவித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.
உலகெங்கும் இந்திய ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here