அனுமதி பெறாமல் அழகு சிகிச்சை! துபாய் பெண் கைது!!

துபாய்:வீட்டிலேயே அழகுக்கான அறுவை சிகிச்சைகள் செய்துவந்த பெண் கைது செய்யப்பட்டார்.
துபாயில் அழகு சிகிச்சை தொடர்பான சட்டங்கள் கடந்த இரு ஆண்டுகளாக கடுமையாக்கப்பட்டுள்ளன.அறுவை சிகிச்சை படிப்புமுடித்த டாக்டர் அல்லது அவரது மேற்பார்வையில் மட்டுமே அழகு சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும்.
ஆனால், பர்துபாய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த பெண் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்துவந்தார்.அவர் உடல் அழகுபெற மருந்து மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்வதாகவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.கல்வித்தகுதி, அனுமதி ஏதுமின்றி முகத்தில் சுருக்கங்களை நீக்கும் அறுவை சிகிச்சை, உதடுகளை கவர்ச்சியாக காட்டும் சிகிச்சை, உடல் பருமனை குறைப்பதற்கான அறுவை சிகிச்சை போன்றவற்றை இவர் செய்துவந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here