மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்! அதிமுக ஆதரிக்காது!!

டெல்லி:மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது என்று தெரிவித்துள்ளது.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவெடுத்தது.
அத்தீர்மானம் இன்று அவையில் பட்டியலிடப்பட்டு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அவையில் நிலவிய அமளியால் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில் சிக்கல் நிலவியது.
மேலும், அவையும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு அவை நடவடிக்கைகள் முடித்துவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்பி வரப்பிரசாத்யாதவ் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம்.
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தினோம்.

அதிமுக எம்பிக்கள் ஆதரவு தரமாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர் என்றார்.நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் எனக்கூறிய முன்னாள் எம்பி பழனிச்சாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here