மது பிரியர்களுக்கு இலவச தொலைபேசி எண்!

சென்னை: டாஸ்மாக் பார்களில் விற்கப்படும் மது, உணவுப்பொருட்களில் தரம் குறைந்தால் இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் அருகில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருவதாகவும் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மாநிலம் முழுவதும் 2500 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டன.இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டாஸ்மாக் மதுபானக் கடையில் வாங்கப்படும் மதுபானங்களை மட்டுமே பார்களில் வைத்து அருந்த வேண்டும். பார்களில் மதுவிற்பனை கூடாது.
வெளியிலிருந்து கொண்டு வரப்படும் தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் பாக்கெட்டுகளை அனுமதிக்கக்கூடாது. 

டாஸ்மாக் பார்களில் சமைக்க கூடாது வெளியிலிருந்து சமைத்து கொண்டுவந்து விற்பனை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் சரக்குகள், டாஸ்மாக் பார்களில் விற்பனையாகும் பொருட்கள் ஆகியவற்றில் புகார் இருந்தால் 1800425 2015 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here