தினகரன் மீது நாஞ்சில் சம்பத் பாய்ச்சல்

சென்னை: திமுக, மதிமுக, அதிமுக, அமுமக என்று அரசியல் பயணம் செய்த நாஞ்சில் சம்பத்,
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய அணியை உருவாக்கினார் இந்த அமைப்பில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் நாஞ்சில் சம்பத்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டிடிவி தினகரன் புதிய கட்சி பெயர் சூட்டுவிழவில் கலந்துகொள்ள முடியவில்லை.காலம் காலமாக எந்த கொள்கையை நான் பேசிவந்தேனோ, எதனால் எனக்கு ஒரு முகமும் முகவரியும் கிடைத்ததோ, அக்கொள்கை எனும் திரவியத்தை கொட்டி கவிழ்த்துவிட்டார் டிடிவி. தினகரன்.
பட்டப்பகலில் இப்படி ஒரு பச்சை படுகொலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை. மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

மனிதனை மனிதனாக எண்ணியது திராவிடம். கற்கால தமிழர்களை பொற்காலத்திற்கு கொண்டுவந்தது திராவிடம்,
திராவிடமும் அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் பணியாற்ற விரும்பவில்லை.
அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்குகிறேன். இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.நாஞ்சில் விலகியது குறித்து தினகரன் கூறுகையில்,
நீதிமன்றத்திடம் நாங்கள் கோரிக்கை விடுத்த பெயர்களில் திராவிடம் இருந்தது. தேர்தல் ஆணையம் இதனை ஒதுக்கியுள்ளது.
இது ஒரு இடைக்கால ஏற்பாடுதான். விரைவில் அதிமுக எங்கள் வசமாகும்.தமிழிசையை நாஞ்சில் விமர்சித்தது குறித்து அவரை கண்டித்தேன். அதிலிருந்து அவர் கட்சிப்பணிகளை குறைத்துக்கொண்டார்.
நாஞ்சில்சம்பத் விலகியதால் எங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here