பள்ளிவிழாவில் அதிநவீன விளக்குகள்! குழந்தைகள் கண் பாதிப்பு!!

நெல்லை: பள்ளி ஆண்டு விழாவில் பயன்படுத்தப்பட்ட அதிநவீன விளக்குகள் வெளிச்சத்தால் குழந்தைகள், பெற்றோர் பார்வை பாதிக்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செயய்யப்பட்டிருந்தது.

விழாவில் அதிகமாக ஒளிஉமிழும் வண்ண விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனால், ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கண்ணில் வீக்கம், எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பாதிப்படைந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here