அம்மா என்றாலே திராவிடம்தான்! சி.ஆர். சரஸ்வதி பேச்சு!!

சென்னை: அம்மா என்றாலே திராவிடம் தான். எனவே திராவிடர் என்ற சொல்லை கட்சியில் சேர்க்க தேவை எழவில்லை என்று தெரிவித்துள்ளார் சிஆர் சரஸ்வதி.
நாஞ்சில் சம்பத் விலகல் குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி அளித்த பேட்டி:நாஞ்சில் சம்பத் ஏன் அதிருப்தியடைந்தார் என்பது எங்களுக்கு தெரியாது.
அம்மா ஜெயலலிதா இருந்தபோது அவர் எடுத்த முடிவுக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா? தலைமை எந்த முடிவை எடுத்தாலும் அதற்கு உடன்பட்டுத்தான் போக வேண்டும்.அம்மா ஜெயலலிதா ஒரு திராவிட தலைவியாக வாழ்ந்தவர் என்பதால் திராவிடர் என்ற சொல்லை கட்சியில் சேர்க்க தேவை எழவில்லை. அம்மா என்ற சொல்லே திராவிடத்தையும் குறிக்கும். ஆதலால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆரம்பித்தோம் என கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேட்டியளித்துள்ள நாஞ்சில் சம்பத்,
எந்த முட்டாள்களும் எனக்கு மூளைச்சலவை செய்ய தேவையில்லை.
எனது முடிவில் மாற்றம் இல்லை. இனி இலக்கிய மேடை, பேச்சுப்பயிற்சி என்று இயங்கவுள்ளேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here