குரங்குச்சேட்டை என்பது இதுதானா?!

தாய்லாந்து: லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பவ்மன் என்ற பெண் தாய்லாந்துக்கு சுற்றுலா வந்தார்.
சியங்மய் விலங்குகள் பண்ணைக்கு நண்பர்களுடன் சென்றார்.


அங்கே குரங்குகள் வசிக்கும் பகுதிக்கு அவர் சென்றார்.
அப்போது குட்டிக்குரங்கு ஒன்று திடீரென்று அவர் முன்னால் வந்தது.
அதற்கு விளையாட்டாக ஹாய் என்று சொன்னார் பவ்மன்.


அவரது கால்சட்டையைப்பிடித்து அவரது தோளில் ஏற ஆரம்பித்தது குரங்கு.
அப்போது அவர் மேலாடையை பிடித்து இழுக்க தர்மசங்கடமாகிவிட்ட பவ்மன், கூக்குரலிட தொடங்கினார்.
அவர் அலறுவதை பார்த்த குரங்கு மேலாடையை விட்டுவிட்டு அங்கிருந்து குதித்து தப்பியோடியது.

இதனை அவருடன் வந்த சக பயணிகள் கேமராவில் படம்பிடித்தனர்.
இச்சம்பவம் குறித்து நகைச்சுவையாக தெரிவித்துள்ளார் பவ்மன்,
தோளில் குரங்கை வைத்துக்கொண்டு ஒரு செல்பி படம் எடுக்கலாம் என்று ஆசை இருந்தது.
ஆனால், நல்ல பிள்ளையாக என் அலறலைக்கேட்டபின் ஆடையை விட்டுச்சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here