Connect with us

National

சிறப்புநிதியை புறக்கணித்த ஆந்திரா அரசு! அருண்ஜெட்லி குற்றச்சாட்டு!!

Published

on

டெல்லி: ஆந்திர மாநில வளர்ச்சிக்கான சிறப்புநிதியை பெற அம்மாநில அரசு புறக்கணித்தது என்று குற்றம் சாட்டியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.இதுகுறித்து அவரளித்த பேட்டி: ஆந்திர அரசு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்தது.
ஆனால், அத்தகைய அந்தஸ்தை உடனே அளித்துவிடமுடியாது.
அதற்குப்பதிலாக சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு அறிவித்தது.அதன்படி, மாநில வளர்ச்சித்திட்டங்களுக்காக, ஆந்திர அரசு 10 சதவீதத்தை ஏற்கும்.
மீதித்தொகையை மத்திய அரசு ஏற்று ஆந்திராவுக்கு நிதிசலுகையை அளிக்கமுன்வந்தது.

ஆனால் நிதிதொகை நபார்டு வங்கிமூலமாகத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியது ஆந்திரா அரசு.
நாங்கள் அதனை மறுத்தோம். இதனையடுத்து ஆலோசித்துவிட்டு வருவதாக கூறினர்.
ஆனால், பதில் ஏதும் கூறவில்லை.அதற்கான தீர்வை கூறாமல் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு நிதிஒதுக்கீட்டை பெறாமல் புறக்கணித்தனர் என்று குற்றம் சாட்டினார் அருண்ஜெட்லி.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator