ஒரு கோடிமதிப்பு வைரநகைகள்! தவறுதலாக குப்பையில் வீசினார் பெண்!!

ஜார்ஜியா: ஒருகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை தவறுதலாக குப்பையில் வீசியுள்ளார் ஒரு பெண்மணி.
அதிர்ச்சிதரும் இச்சம்பவம் நடந்துள்ளது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில்.ஜார்ஜியா நகரை சேர்ந்த பெண்மணி ஒருவர் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்திருந்தார்.
விருந்தினர் வீட்டில் கொடுத்த உணவுக்கு அருகேயே தான் அணிந்து சென்ற நகைகளை கழற்றி வைத்திருந்தார்.
காலையில் குப்பை சேகரிப்பவர் வந்தபோது நகைகளையும் மீதமான உணவுப்பொருளுடன் சேர்த்து ஒரு பையில் இட்டு கொடுத்துவிட்டார்.
சுமார் 3மணி நேரத்துக்குப்பின் நகைகள் குறித்து ஞாபகம் வந்தது.

குப்பையை கொடுத்த பையில் தவறுதலாக நகையை கொடுத்ததை வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் உறுதி செய்தார்.
உடனடியாக போலீசுக்கு போன் செய்தார். அவர்கள் குப்பை சேகரிக்கும் பகுதிக்கு விரைந்து சென்று தகவல் தெரிவித்தனர்.அதற்குள், குப்பை சேகரிக்கும் மைதானத்தில் 300டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடுத்துவரப்பட்டிருந்தன.
அப்பெண்மணி வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் 4டன் குப்பைகள் வந்திருந்தன.
அப்பெண் கூறிய ஒரேஒரு தகவல் கருப்பு நிற பிளாஸ்டிக்பை நீளமான பிடியுடன் கூடியது என்பது மட்டுமே.

சுமார் 4மணிநேரம் பத்து தொழிலாளர்கள் தேடும்படலத்தில் ஈடுபட்டனர்.
கடைசியாக நகைகள் இருந்த பை கிடைத்து அப்பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here