விமானத்தின் கதவு திடீரென திறந்தது! ஓடுதளத்தில் தங்க மழை!!

ரஷ்யா: சரக்கு விமானத்தில் இருந்து தங்கம், பிளாட்டின கட்டிகள் மழையாக பொழிந்துள்ளது.
ரஷ்யாவின் யாகுதியா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.

நிம்பஸ் என்ற சரக்கு விமானம் யாகுதியாவில் இருந்து பறக்க முயற்சித்தது.
அப்போது சரக்கு விமானத்தின் கதவுகள் எதிர்பாராமல் திறந்துகொண்டன.
இதனால் விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்ட தங்க கட்டிகள், பிளாட்டினம் ஆகியவை ஓடுதளத்தில் சிதறி விழுந்தன.


விமானநிலையத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து யாகுதியா விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தவறிவிழுந்த தங்கம், பிளாட்டினம் கட்டிகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.சிகோட்டா மைனிங் என்ற சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இக்கட்டிகள் மத்திய வங்கியில் வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here