நிருபரை விமர்சித்த அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்!

சென்னை:பெண்நிருபரை அழகாக இருக்கிறீர்கள் என்று கூறியது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சொன்னார்.அடுத்தடுத்த கேள்விகளை செய்தியாளர் தொடர்ந்து கேட்டதற்கு, கூட்டம் தொடர்பான அறிக்கை வழங்கப்படும். மூத்த தலைவர்கள் சொல்வார்கள்.
நீங்க அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க, அழகா இருக்கீங்க என்று 3 முறை சொல்லிச் சென்றார் அமைச்சர்.

இதுகுறித்து அமைச்சர் இன்று விளக்கம் அளித்தார்.
அனைத்து பத்தரிகை நிருபர்களையும் சகோதர, சகோதரியாகவே நான் பார்க்கிறேன்.
அரசியல் கேள்விகளை தவிர்ப்பதற்காகவே நான் முற்பட்டேன்.
யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.
இது குறித்து என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here