கேரளாவில் நடந்த ஹெல்மெட் சோகம்!

ஆலப்புழா:திருச்சி திருவெறும்பூரில் நடைபெற்ற ஹெல்மட் சம்பவம் போன்று கேரள மாநிலத்திலும் நடந்துள்ளது.ஆலப்புழா நகரை சேர்ந்தவர் விஜூ. இவர் மனைவி மற்றும் இரு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றுவிட்டு நால்வரும் வீட்டுக்கு திரும்பிவந்துகொண்டிருந்தனர்.அப்போது போலீஸ் ஜீப் ஒன்று விஜூவின் மோட்டார்சைக்கிளை மறித்தது.
திடீரென்று போலீஸ் ஜீப் குறுக்கிட்டதால் அதன்மீது மோதாமல் இருக்க விஜூ முயன்றார்.
அதற்குள் பின்னால்வந்த மோட்டார்சைக்கிள் அவர்வாகனம் மீது மோதியது.
நால்வரும் கீழே விழுந்து உருண்டனர்.

விஜூவின் முதுகுதண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் நடப்பதற்கு சிரமம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விஜூ ஒன்வேயில் வந்தார் என்றும், அவரது மனைவி, மகள்கள் ஹெல்மட் அணியவில்லை. எனவே போலீசார் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது.சில தினங்களுக்கு முன் ஹெல்மெட் அணியாமல் மனைவியுடன் திருச்சியில் சென்ற ஒருவர் போக்குவரத்து போலீஸ்காரரின் இடையூறால் மனைவியை இழந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here