மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தமிழக அரசு ஆடாது!

சென்னை: மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் தமிழக அரசால் ஆட முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.இன்று அவரளித்த பேட்டி விபரம்:
காவிரி விவகாரத்தில் அதிமுக ஜனநாயக ரீதியில் போராடி வருகிறது.
தமிழக மக்களின் நலனுக்காக அதிமுக அரசு உணர்வுப்பூர்வமாக போராடும்.

இதுதொடர்பாக மத்திய அரசு கூறுவதை எல்லாமல் தமிழக அரசு ஏற்காது
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.அதிமுக செய்திதொடர்பாளர் வைகைச்செல்வன் பேசும்போது
பாஜக அரசின் மீது சந்திரபாபு அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
இதில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து உயர்மட்டகுழு முடிவு எடுக்கும்.

தமிழகத்தில் பாஜக நாடகம் நடத்தி குழப்பம் ஏற்படுத்துவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளாரே என கேட்டதற்கு, அவ்வாறு குழப்பங்கள் ஏதும் இல்லை அனைத்து குழப்பங்களையும் தவிடுபொடியாக்கி அதிமுக வெற்றிநடைபோடும் என வைகை செல்வன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here