நிர்பயாவின் தாயை வர்ணித்த பாஜக தலைவருக்கு கண்டனம்!

பெங்களூர்:டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிர்பயா, அவரது தாயார் மீது பாஜகவின் முன்னாள் எம்பி முகம்சுழிக்கும் வகையில் பேசியுள்ளார்.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு சாதனை படைத்த பெண்களை கவுரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கும் விழா பெங்களூரில் நடைபெற்றது.
தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவில் நிர்பயாவின் தாயார் ஆஷாதேவிக்கு தீரப்பெண்மணி விருது வழங்கப்பட்டது.விழாவில் பங்கேற்று பாஜகவின் முன்னாள் எம்பியும், கர்நாடக காவல்துறை முன்னாள் தலைவருமான சாங்கிலியானா பேசினார்.
நிர்பயாவின் தாயார் எந்த ஒரு நெருக்கடிக்கும் ஆளாகாமல் தனது மகள் வழக்கில் தைரியத்துடன் வாதாடி நீதியை பெற்றுள்ளார் என்று பாராட்டினார் சாங்கிலியானா.தொடர்ந்து அவர் பேசுகையில், நிர்பயாவின் தாயார் இவ்வளவு கட்டுடலுடன் அழகாக இருக்கிறார் என்றால் அவர் மகள் எத்தனை அழகாக இருக்க வேண்டும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

பலம் வாய்ந்த ஆண்கள் பலாத்காரம் செய்தால், அவர்களிடம் சண்டையிடாமல் பெண்கள் சரணடைந்து விடுங்கள்.  அப்படி செய்தால், உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

அதன்பின்னர் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வோம்.
இவ்வாறு சாங்கிலியானா பேசியுள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here