டிடிவி தினகரன் அணிக்கு புதுப்பெயர்! புதுக்கொடி!!

மதுரை:அதிமுகவில் இருந்து பிரிந்து 21எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் இயங்கிவரும் தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் இன்று குவிந்தனர்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய தினகரன் பேசியதாவது:
துரோகிகள் பன்னீர்செல்வம் மற்றும் மதுசூதனன் கொடுத்த மனுவால் கடந்த ஆண்டு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அஇஅதிமுக பெயரில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்டேன்.நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பில் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனன் அணிக்கு வழங்குவதாகவும் அஇஅதிமுக என்ற பெயரை நாம் பயன்படுத்தக்கூடாது எனவும் கூறியது. இதையடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும், உதயசூரியனை டெபாசிட் இழக்கச் செய்தோம். 

 நாம் துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்போம். அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரே அமைப்பாக செயல்படுவோம்.
நமது அமைப்பில் எந்த ஒரு அமைப்பிலும் இல்லாத வகையில் உறுப்பினர்கள் சேர்க்கை இருக்கவேண்டும். நீங்கள் தேனீக்களாக பணியாற்ற வேண்டும். கூட்டுறவு தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என்று எந்த ஒரு தேர்தலாக இருந்தாலும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அதிமுக கொடியை போன்று மூன்று வர்ணங்களிலும் அதன் நடுவில் அண்ணாவுக்கு பதிலாக ஜெயலலிதாவின் உருவம் அக்கொடியில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here