மாணவியை சூறையாட முயன்ற தலைமையாசிரியர் கைது!

சண்டிகர்: தேர்வு எழுதவந்த மாணவியை பலாத்காரம் செய்யமுயன்ற பள்ளி தலைமையாசிரியர் கைதானார்.
சண்டீகர் சோனிப்பேட்டையில் உள்ள பண்ணையார் ஒருவரின் மகள் சுமாராக படிப்பவர்.அவர் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம் என்று பண்ணையார் நினைத்தார்.
அருகில் உள்ள பள்ளி தலைமையாசிரியரிடம் நிலைமையை விளக்கினார்.
பத்தாயிரம் ரூபாய் தருகிறேன். என்மகளை பத்தாம் வகுப்பில் பாஸ் செய்ய வையுங்கள் என்று கெஞ்சினார்.அதற்கு பள்ளித்தலைமையாசிரியர் உங்கள் மகளை எனது உறவினர் வீட்டில் தங்க வையுங்கள் என்று கூறினார்.
பத்தாம் வகுப்பு தேர்வு ஆரம்பித்த நாளன்று அம்மாணவியை அழைத்தார் தலைமையாசிரியர்,உனக்கு பதில் நன்றாக படிக்கும் மற்றொரு பெண்ணை தேர்வு எழுத வைத்துள்ளேன்.

நீ எப்படியும் பாஸ் ஆகிவிடுவாய் என்று கூறி வரம்புமீறி நடந்துகொண்டுள்ளார்.
அவரிடமிருந்து தப்பிச்சென்ற அப்பெண் தந்தையிடம் நடந்ததை கூறினார்.
பண்ணையார் கொடுத்த புகாரின்பேரில் தலைமை ஆசிரியர் கைதாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here