Connect with us

Tamilnadu

ரேஷன் மண்ணெண்ணை குறைப்பு! மத்திய அரசு விளக்கம்!

Published

on

டெல்லி:தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் மானியவிலை மண்ணெண்ணையில் ஒரு லட்சம் கிலோ லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் விநியோகிக்க மத்திய அரசு மானியவிலை மண்ணெண்ணை வழங்குகிறது.இதுவரை 3.07லட்சம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு 2.04லட்சம் கிலோ லிட்டராக குறைக்கப்பட்டது.
இதனால் ஏழை மக்களுக்கு கெரசின் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.இதுகுறித்து மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தில் எரிவாயு பயன்பாடு 81.1சதவீதம் அதிகரித்துள்ளது.

மின்விநியோகம் 100% என்று உள்ளது. எனவே மண்ணெண்ணை அளவு குறைக்கப்பட்டது.
தமிழக அரசு ரேஷன் விநியோகத்துக்கு சந்தைவிலையில் மண்னெண்ணை பெற்றுக்கொள்ளமுடியும்.
இவ்வாறு பிரதான் பதிலில் கூறப்பட்டுள்ளது.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator