காப்பீட்டு பணத்துக்காக கணவர் கொலை! மனைவி, சகோதரர் கைது!!

கர்னூல்: காப்பீட்டுப்பணத்துக்காக கணவரை தீர்த்துக்கட்டிய மனைவியையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆந்திரமாநிலம் பிரகாசம் மாவட்டம் சோழவீடு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசுலு.இவரது மனைவி ரமாதேவி. இருவருக்கும் ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ரமாதேவியின் சகோதரர் ரமேசும், ஸ்ரீனிவாசுலுவும் ஹைதராபாத்தில் வியாபாரம் செய்துவந்தனர்.
ரமாதேவிக்கு அவரது கிராமத்தை சேர்ந்த மற்றொரு நபருடன் தொடர்பு இருந்தது.
இவ்விபரம் தெரியவந்த ரமேஷ், சகோதரியை மிரட்டியுள்ளார்.

இதனால் ரமாதேவியும், ரமேசும் சேர்ந்து ஸ்ரீனிவாசுலுவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர்.
ஸ்ரீனிவாசுலுவின் இன்சூரன்ஸ் பணத்தை ரமேசுக்கு தருவதாக முடிவெடுத்தனர்.
திட்டமிட்டபடி, வெளியூருக்கு காரில் அழைத்துச்செல்லப்பட்டார் ஸ்ரீனிவாசுலு.
காரில் லாரியை மோதவிட்டு அவரை கொலை செய்தனர். அவ்வழக்கு சாதாரண விபத்து என்று முடிந்தது.

இந்நிலையில், இச்சதித்திட்டத்தில் உதவியாக இருந்த இருவர் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ரமேஷ், ரமாதேவி கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here