திராவிட கொள்கைக்கு விடைகொடுக்கிறதா தமிழக அரசியல்?!

மதுரை: அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்- அமமுக என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கியுள்ளார் தினகரன்.
மதுரை மேலூரில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் தனது அமைப்பின் பெயர், கொடியை அவர் அறிமுகப்படுத்தினார்.
தமிழக அரசியல் திராவிட பாரம்பரியத்தில் ஊறிவளர்ந்தது.
ஆனால், கமல், தினகரன் ஆகியோர் தொடங்கிய அரசியல் அமைப்புகளில் திராவிடம் என்ற சொல் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டனர். இது திராவிட கொள்கைகள் தமிழகத்தில் நீர்த்துப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

திராவிடம் என்றால் கடவுள் மறுப்பு, உயர்ஜாதியினர் எதிர்ப்பு என்ற எதிர்மறை எண்ணம் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இன்றைய இளைஞர்கள் அறிவுக்கூர்மையுடன் இணக்கத்தை விரும்புவதால் வெண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் ஆட்சியை அமைப்போம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா ஆட்சியை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அது சாத்தியமாகும்.
அதற்கு இரட்டை இலையை முடக்கியவர்களை ஒதுக்கி கட்சியை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும். இதற்கான பணிகளுக்கு செயல்வடிவம் தரும் அமைப்பாக அமமுக மலர்ந்துள்ளது என்று தினகர ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 அமமுக-வின் கொடியை தஞ்சை வட்டச்செயலாளர் வெங்கட்ரமணி வடிவமைத்துள்ளார்.
அமமுக கொடியில் அதிமுக கொடியின் நிறத்தைப்போன்றே கருப்பு, சிவப்பு நிறங்கள் உள்ளன.
கருப்பு சிவப்பு நிறங்கள் உள்ளதைப்போன்று இரு மடங்கு அளவு பெரிதாக வெள்ளை நிறம் நடுவே இடம்பெற்றுள்ளது.
அதிமுக கொடியில் அண்ணாதுரையின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.
அமமுக கொடியில் ஜெயலலிதாவின் உருவம் இடம்பெற்றுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here