மத்திய அரசால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரிப்பு!

சென்னை:மத்திய அரசின் திட்டங்களால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
துணைமுதல்வரும், நிதியமைச்சருமான ஓபன்னீர்செல்வம் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில், தமிழகத்தின் நிதிப்பற்றாக்குறை ரூ.17,480கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைமுக வரியில் ஜிஎஸ்டியால் தமிழக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

இதனால் தமிழக பொருளாதாரத்தில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, உதய் மின் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக மத்திய அரசு உதய் மின் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here