முரட்டுக்காளையால் தூக்கிவீசப்பட்ட பெண்! பகீர் படங்கள்!!

குஜராத்:முரட்டுக்காளையால் தூக்கிவீசப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றங்கரையில் உள்ள அழகிய நகரங்களில் ஒன்று பரூச்.
இந்நகரில் வீட்டுக்குத்தேவையான பொருட்கள் வாங்க சாலையோரமாக ஒரு பெண் சென்றுகொண்டிருந்தார்.

மார்க்கெட் சாலையில் அவர் சென்றுகொண்டிருந்தபோது அவர் பின்னால் இருந்துவந்த காளை அவரை முட்டியது.
அதன் கொம்புகளில் பெண்ணின் ஆடை சிக்கிக்கொண்டது.
தலையை சுழற்றி அப்பெண்ணை விழவைக்க காளை முயன்றது.
முடியவில்லை என்பதால் அவரை தூக்கி வீசியது. பின் அங்கிருந்து சென்றது.
காளையால் தூக்கிவீசப்பட்ட பெண் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தலையின் பின்பகுதி, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
பரூச் நகரின் மார்க்கெட் பகுதியில் அக்காளை நீண்டநாட்களாக சுற்றிவருகிறது. அதன் உரிமையாளர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாடுமுட்டி சாலையில் தூக்கிவீசப்பட்ட பெண்ணின் விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here