பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!

லண்டன்: புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி மற்றும் அறிவியல் உலகத்தின் நட்சத்திரம் ஸ்டீபன் ஹாக்கிங் (76)  மரணமடைந்தார்.
இருதயமும் மூளையும் நுரையீரலும் கைவிரல்கள் தவிர்த்து பிற உறுப்புகள் இயங்காமல் கணிணி உதவியோடு பேசி இயந்திர நாற்காலியில்  வாழ்ந்தவர் இவர்.
பேரண்டம் பற்றிய ஆர்வலர்களை ஊக்கம் அளித்து பல விவாதங்களுக்கும் ஆளானவர். பிரபஞ்சம் பெருவெடிப்பினால் தோன்றியது என்பதை இயற்பியல் துணையுடன் நிரூபித்தவர்.

1942ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர்.செயின்ட் ஆல்பர்டில் தனது 11வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார் ஹாக்கிங்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் 1952 ஆம் ஆண்டு இயற்பியல் துறையை தோ்வு செய்துள்ளார். முதல்வகுப்பில் வெற்றி பெற்றார்.மோட்டார் நியுரான் நோயால் பாதி்ப்புக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கிய
போது அவருக்கு வயது 21. மருத்துவர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே
உயிர் வாழ்வார் என்று கூறிவிட்டனர். ஆனால் ஹாக்கிங் மரணத்தை பற்றி தனக்கு
கவலையில்லை நிச்சயம் மரணம் ஒரு நாள் வரும் என்று கூறி தனது ஆராய்ச்சிப்பணிகளை தொடர்ந்தார். இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர். இவருக்கு 3குழந்தைகள் உள்ளனர்.

50 ஆண்டுகளுக்க மேலாக சக்கர நாற்காலியில் வாழ்ந்த அவர் செயல் இழந்துவரும் அவரது உறுப்புகளுக்கு அவரே கருவிகளை உருவாக்கி பயன்படுத்தினார்.
1985ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் பேசும் திறனை இழந்த இவர்
ஸீபிச் சின்தஸைசர் என்ற கணிணியில் வடிவமைக்கப்பட்ட புரோகிராம் மூலம்
கன்னதசைகளி்ன் அசைவால் ஆற்றிய உரைகள் விஞ்ஞான உலகைத்தையே அவரிடம் ஈர்த்தன.

சாமானியர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்
என விரும்பினார்.
இவர் தீவிர கடவுள் மறுப்பாளர். அண்டம் இயங்க கடவுள் தேவையில்லை
என்று கூறியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here