Connect with us

International

ரூ.5லட்சம் மதிப்பு உள்ளாடைகள் திருட்டு! இளம்பெண்கள் கைது!!

Published

on

கலிபோர்னியா: உள்ளாடை கடையில் ரூ.5லட்சம் மதிப்புள்ள பிராக்களை திருடிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாக்ரமெண்டோ நகரம்.
இந்நகரில் விக்டோரியா சீக்ரெட் என்ற பிரபல உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தின் ஷோரூம் உள்ளது.
ஷோரூம் உரிமையாளரான பெண்மணி கடையின் வெளியே வந்து நின்றுகொண்டிருந்தார். அப்போது சொகுசு காரில் வந்திறங்கினர் இரு இளம்பெண்கள்.அவர் கடைக்குள் வந்து விலை உயர்ந்த பிரா தங்களுக்கு வேண்டும் என கேட்டனர்.
பல மாடல்களை கடைக்காரர் காண்பித்தார். அவ்விருபெண்களும் திடீரென கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்ப்ரே தெளித்து மயக்கமடைய வைத்தனர்.
ரூ.5லட்சம் மதிப்புள்ள பிராக்களை அங்கிருந்து திருடி சென்றனர்.
மயக்கம் தெளிந்த கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.

அப்பெண்கள் வந்த காரின் அடையாளத்தை தெளிவாக கூறினார். இதனால் குற்றவாளிகள் அடுத்த 3மணிநேரத்தில் கைது செய்யப்பட்டனர்.
அப்பெண்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சொகுசுவாழ்க்கைக்காக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதாக போலீசில் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2017 Zox News Theme. Theme by MVP Themes, powered by WordPress. Shared By Fancy Text Generator